சித்தர்கள் கோட்டத்தில், குருபூர்ணிமா கொண்டாட்டம்!

சித்தர்கள் கோட்டத்தில், குருபூர்ணிமா கொண்டாட்டம்!

ஆன்மிக குருமார்களை வழிபடுவதற்கு உரிய நாளாக கொண்டாடப்படும் குரு பூர்ணிமா மகாபாரத காவியத்தை எழுதியவரும், வேதங்களை தொகுத்து தந்தவருமான மகரிஷி வேத வியாசரின் பிறந்த நாளும் கூட. இந்துக்கள் மட்கடுமின்றி புத்த மதத்தினர், ஜயின மதத்தினர் ஆகியோருக்கும் மிக முக்கியமான வழிபாட்டு நாளாக குரு பூர்ணிமா திகழ்கிறது. ஆஷாட மாத்தில் வரும் பெளர்ணமி திதியில் குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆன்மிக குருமார்கள், ஆன்மிக வழிகாட்டிகள் உள்ளிட்டோரை வணங்குவது மிகவும் சிறப்பானதாகும்.

சித்தர்கள் கோட்டத்தில், குருபூர்ணிமா கொண்டாட்டம்!

குரு பூர்ணிமா நாளில் குருவிற்கு பூஜை செய்து வணங்குவது, அவருக்கு பரிசுகள் வழங்குவது, குருமார்களின் ஆசிகளை பெறுவது ஆகியவற்றை மக்கள் செய்வது உண்டு. குரு-சிஷ்யர்கள் இணைந்து கொண்டாடும் சிறப்புக்குரிய பண்டிகையாகவும் குரு பூர்ணிமா விளங்குகிறது. தங்களின் ஞானம் பெருக வேண்டும், ஆன்மிகத்தில் உயர் நிலையை அடைய வேண்டும் என்பதால் குருமார்களை வேண்டி ஆசிகளையும், வழிகாட்டுதல்களையும் இந்த நாளில் பெறுவது வழக்கம். இந்த ஆண்டு குரு பூர்ணிமா ஜூலை 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஜூன் 20ம் தேதி மாலை 06.10 மணி துவங்கி, ஜூலை 21ம் தேதி மாலை 04.51 வரை பெளர்ணமி திதி உள்ளது. முதல் நாள் மாலையே பெளர்ணமி திதி துவங்கி விட்டாலும் சூரிய உதய நேரத்தில் இருந்து திதியே அந்த நாளுக்கான திதி என்பதால் ஜூலை 21ம் தேதியையே குரு பூர்ணிமா நாளாக கருதி வழிபடுகிறோம்.

இந்த குரு பூர்ணிமாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்  தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சித்தர் கோட்டத்தில் தாமிரபரணி தாய்க்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இந்தியாவிலேயே ஆறுகளுக்கு அனுதினமும் ஆரத்தி நடக்கும் இடமாக கருதப்படுவது கங்கை என்பது பலரும் அறிந்த விசயமாக இருந்தாலும், தினமும் மாலை 6 மணியளவில் ஜீவ நதியான இந்த தாமிரபரணி நதிக்கு ஆரத்தி நடைபெறுவது வெகு சிலர் மட்டுமே அறிந்த விசயமாகும். 

YouTube
Instagram
WhatsaApp
error: This Content is reserved and protected by www.naradharvoice.com