அத்திப்பள்ளியில் கால் வைப்பாரா சசிகலா…?

அத்திப்பள்ளியில் கால் வைப்பாரா சசிகலா…?

– அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்

சசிகலா

4 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பின் 2021 ஜனவரி 27ஆம் தேதி புதன் கிழமை இரவு 9.30 மணியளவில் கர்நாடக மாநிலம், பரப்பன அக்ரகாரா சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவரவிருக்கும் சசிகலாவிற்கு தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் வைத்து மிக பிரமாண்டமான வரவேற்பு கொடுப்பதற்கு தயாராகி வருகிறனர் அவரது ஆதரவாளர்கள்.

இந்த பரபரப்பிற்கிடையே கடந்த 2017ல் சிறையில் சிறப்பு வசதிகள் பெறுவதற்காக அப்போது கர்நாடக சிறைத்துறை அடுத்த ஆண்டு கடந்த 2017ஆம் ஆண்டு அப்போது சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.யாக இருந்த சத்யநாராயண ராவுக்கு சசிகலா தரப்பு 2 கோடி லஞ்சம் தந்ததாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த ரூபா ஐ.பி.எஸ். புகாரளிக்கவே அதன் அடிப்படையில் சசிகலா, சத்யநாராயனா ராவ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் மீது வழக்கு ஒன்று பதிவானது. அதன் அடிப்படியில் காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டார் சத்யநாராயண ராவ். அந்த வழக்கானது வரும் ஜனவரி 2வது வாரம் விசாரணைக்கு வரவிருப்பதாக கூறப்படுவதால்,  ‘குறிப்பிட்ட அந்த தேதியிலாவது சுதந்திரக் காற்றை சுவாசிப்பாரா சசிகலா?’  என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் வலம் வரத் துவங்கிவே அதிர்ச்சியில் இருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

ரூபா ஐ.பி.எஸ்.,

இது பற்றி, சசிகலா வழக்கை உன்னிப்பாக கவனித்து வரும் வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசும் போது, ‘அந்த வழக்கின் அறிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சசிகலா விடுதலையாவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே அந்த வழக்கு விசாரணை வரவிருப்பது உண்மைதான். ஆனால், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பும் அப்போது அ.ம.மு.க.வின் புகழேந்தியிடன் 7 மணி நேரம் விசாரணை நடத்தி முடித்த பின் இதே போல ஒரு முதல் கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், லஞ்சம் கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லையென தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் என்ன எழுதியிருந்தாலும் அது சசிகலாவின் விடுதலையை பாதிக்காது. நடந்து வருவது சாதாரன நீதிமன்ற நடவடிக்கைகளே’ என்றனர் அவர்கள்.

புகழேந்தி தற்போது டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க.வில் இல்லை என்பதும், சசிகலா மீது குற்றம் சுமத்திய டி.ஜி.பி. ரூபா தற்போது கர்நாடக மாநில உள்துறை செயலாளராக இருப்பதுமே சசிகலாவின் ஆதரவாளர்களை இந்த குழப்பத்திற்கு ஆளாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

YouTube
Instagram
WhatsaApp
error: This Content is reserved and protected by www.naradharvoice.com