“எதிர்க்கட்சி தலைவராக தார்மீக தகுதி இல்லை…!” – எடப்பாடியாருக்கு பரபர கடிதம்!

“எதிர்க்கட்சி தலைவராக தார்மீக தகுதி இல்லை…!” – எடப்பாடியாருக்கு பரபர கடிதம்!

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் அதே 7 ஆம் தேதி மாலையில் சென்னையில் கூடவிருக்கிறது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம். அதிமுகவின் ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் கூடவிருக்கும் அந்த கூட்டத்தில், ‘அமையவிருக்கும் புதிய சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்யப்படவிருப்பது ஓ.பன்னீர் செல்வமா அல்லது எடப்பாடி பழனிச்சாமியா?’ என்பது குறித்த ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக தலைமை நிலையம்

வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த மறுநாள், ‘நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒருபக்கம் ஆளும் கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியாக இருக்கும். தேர்வு செய்யப்பட ஆட்சி சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் கடமை நமக்கு உள்ளது. எதிர்க்கட்சி என்னும் பெரிய பொறுப்புடன் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அதை நிறைவேற்றுவோம்’ என ஓ.பி.எஸ். மற்றும், ஈ.பி.எஸ். ஆகியோர் கூட்டறிக்கை விட்டாலும், கடந்த ஆட்சியின் முதல்வர் என்ற முறையில் எதிர்க்கட்சி தலைவராக அமரும் தகுதி தனக்கே இருப்பதாக கருதும் எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆதரவாளர்கள் மூலம் அதை செயல்படுத்தும் நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதே போல, 3 முறை முதல்வராக இருந்தவர் என்ற முறையிலும், 3 முறைகளுமே ஆட்சிக்கட்டிலில் அமர முன்னால் முதல்வர் ஜெயலலிதாவால் சுட்டிக்காட்டப்பட்டவர் என்ற முறையிலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையிலும் எதிர்க்கட்சி தலைவராகும் தகுதி ஓ.பி.எஸ்.சுக்கு மட்டுமே இருப்பதாக கூறி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

ஓ.பன்னீர் செல்வம்

இந்நிலையில், ‘கழகத்தின் உண்மை விசுவாசி’ ஒருவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று இன்று (மே 4ஆம் தேதி) மாலை முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில்,

திரு.எடப்பாடியார் அவர்களே!

1.  134 சட்டமன்ற உறுப்பினர்களோடு உங்கள் கையில் ஆட்சியை ஒப்படைத்தோம். நாலரை ஆண்டுகளில்   பாதிக்கும் குறைவாக 66 சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கி விட்டீர்கள்.

2.   2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியைத் துடைத்து இழுத்து மூடி விட்டீர்கள்.

3. உள்ளாட்சித் தேர்தலில் பாதி இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை.

4. நகராட்சித் தேர்தலை நடத்தும் தைரியம் இது வரை வந்ததில்லை.

5.  38 மாவட்டங்களில் பரந்து விரிந்த அஇஅதிமுக கட்சியை 5 மாவட்டக் கட்சியாக சுருக்கி விட்டீர்கள்.

6. நான் ஒரு விவசாயி என்று நீங்கள் போட்ட வேஷத்தை அசல் விவசாயிகள் யாரும் நம்பவில்லை. டெல்டா மாவட்டங்கள் அனைத்தும் துடைக்கப்பட்டது.

7. பல மாவட்டங்களில் ஒரு இடம் கூட இல்லாமல் முற்றிலும் மூடப்பட்டது.

8. தேமுதிக, புதிய தமிழகம் போன்ற சிறு கட்சிகளை கூட்டணியில் சேர்த்திருந்தால் மேலும் பல இடங்கள்  கிடைத்திருக்கும். கூட்டணி வியூகம் அமைக்கத் தெரியாத அரசியல்வாதி  நீங்கள்.

9. உங்களின் வீண் பிடிவாதத்தால் அமமுகவை சேர்க்க மறுத்தீர்கள். 30 தொகுதிக்கு மேலாக அமமுகவால் வீழ்த்தப்பட்டீர்கள்.

எடப்பாடி பழனிச்சாமி

10. அடுத்த புரட்சித் தலைவராகவும் புரட்சித் தலைவியாகவும் உங்களை நீங்களே கற்பனை செய்து கொண்டு வலம் வந்தீர்கள்.

11. உங்கள் சுயநலத்திற்காக சேலத்தில் மூடிக்கிடந்த விமான நிலையத்தை திறந்ததோடு 8 வழிப் பாதைக்கும் ஏற்பாடு செய்தீர்கள்.

12. நாடாளுமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டு பதவி காலம் மிச்சம் இருக்கும் போதே திரு.கே.பி. முனுசாமிக்கும் திரு.வைத்திலிங்கத்துக்கும்  சட்டமன்றத்திற்கு இடம் கொடுத்து இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல் வர வழிவகுத்தீர்கள்.

13. கொங்கு மண்டலம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டீர்கள்.

14. எல்லா வேலை வாய்ப்பையும் கொங்கு மண்டலத்துக்கே வழங்கினீர்கள்.

15. சென்னை முதல் கன்னியாகுமரி வரை எல்லா ஒப்பந்தங்களையும் கட்டுமானங்களையும் கொங்கு மண்டலத்துக்கே  கொடுத்தீர்கள்.

16. தவறான நிர்வாகத்தால் தமிழ்நாட்டை இரண்டு லட்சம் கோடி கடனாளியாக உயர்த்தினீர்கள்.

17. டாஸ்மாக் மட்டுமே உங்களைக் காக்கும் தெய்வம் என்று முடிவு செய்தீர்கள். அதனால் தாய்மார்கள் உங்களைக் கை விட்டார்கள்.

18. துரோகத்துக்கும், நன்றி கெட்டதனத்துக்கும் உலகில் உங்களை விட சிறந்த எடுத்துக்காட்டு இல்லை.

எனவே எதிர்கட்சித் தலைவராக உங்களுக்கு ஆக எந்த தகுதியும் இல்லை.

உங்களைத் தவிர 65 அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் உங்களுக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த ஐயா OPS அவர்களை எதிர்கட்சித் தலைவராக்கி நீங்கள் செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடுங்கள்.

இப்படிக்கு

கழக உண்மை விசுவாசி

வானதி சீனிவாசன்

என முடிகிறது அந்த கடிதம். இந்நிலையில், ‘தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவரை பா.ஜ.க.வே முடிவு செய்யும்’ என பாஜக சார்பில் கோவை தெற்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவரும், அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன் கூறியிருப்பது அதிமுகவின் உண்மை தொண்டர்கள் பலரையும் கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

YouTube
Instagram
WhatsaApp
error: This Content is reserved and protected by www.naradharvoice.com