“தப்பு செஞ்சா காலி..!” – அமைச்சர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!

“தப்பு செஞ்சா காலி..!” – அமைச்சர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!

முதல்வராக மு.க.ஸ்டாலின்…

கடந்த மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றவுடன் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில், ‘தமிழகத்தை தரணியிலேயே தலைசிறந்த வாழ்விடமாக மீண்டும் மாற்றிக்காட்டுவதே  நான் எடுத்திருக்கிற சூளுரை’ எனக் குறிப்பிட்டிருந்தார் திமுக தலைவரான மு.க.ஸ்டாலின். அதன்படியே, கொரோனா ஒழிப்பு முதல் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம்  ஊரடங்கு கால நிவாரணம் என ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது அவரது தலைமையிலான அரசு.

                இந்நிலையில், நேற்று நடந்த முதல் அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு, அமைச்சர்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், தவறு செய்யும் அமைச்சர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் அமைச்சரவை கூட்டம்
  • அமைச்சர்கள் தங்கள் துறைகளின் பணி நியமனங்கள், அமைச்சர்களின் பி.ஏ-க்களின் நியமனங்கள் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும்.
  • தங்கள் தொகுதிகளில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து யாரும் காவல்துறையை நேரடியாக தொடர்பு கொள்ளவோ, தொலைபேசியில் அழைக்கவோ கூடாது. மேலும், காவல்துறை தன் அதிகாரத்துக்குள் இருப்பதால், எந்த பிரச்சனையாக இருந்தாலும், தன்னிடம் நேரடியாக புகார் அளிக்க வேண்டும்.
  • 10 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சி அட்சிக்கு வந்துள்ளதால், மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்கான மிகப்பெரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
  • அமைச்சர் பதவிக்கு தகுதியானவர்கள் நம் கட்சியில் பலர் இருக்கிறார்கள். பலருக்கு இதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில், உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி மக்கள் பணியில் ஈடுபட வேண்டும்

                என்று அமைச்சர்களுக்கு அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலின், ‘அமைச்சர்கள் அனைவரும் நேர்மையாகவும், நியாயமாகவும் தங்கள் பணிகளில் ஈடுபட வேண்டும்’ எனவும், ‘தவறு செய்யும் அமைச்சர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்’ என எச்சரித்ததாகவும் தெரிகிறது.

கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் திமுக ஆட்சி அமையாததற்கு பல்வேறு காரனங்கள் இருந்த போதும், அப்போது இருந்த திமுக பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலரின் அராஜகப்போக்கே காரனமாக கூறப்பட்டு வந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த புதிய உத்தரவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

– இளமதி

YouTube
Instagram
WhatsaApp
error: This Content is reserved and protected by www.naradharvoice.com