மருத்துவர் கண்டத்தில் மத்திய மண்டல வி.ஐ.பி…! – அதிர்ச்சியில் அதிமுகவினர்!

மருத்துவர் கண்டத்தில் மத்திய மண்டல வி.ஐ.பி…! – அதிர்ச்சியில் அதிமுகவினர்!

“சிலருக்கு தண்ணியிலே கண்டம்னு சொல்றது மாதிரி, அவருக்கு ‘அதுலதான்’ கண்டம் போலிருக்கு” என நமட்டுச் சிரிப்பு சிரித்தவாரே பேச்சை துவங்கினார் நையாண்டி.

                “ஒரு காலத்துலே மத்திய மண்டலத்தில் சைரன் காரில் வலம் வந்தவர் அந்த மனுசன். பெருமாள் கோயில் கொண்ட தொகுதியிலே ஜெயிச்சு, அதற்கு அப்புறமா சூரியன் உதிக்கும் திசையில் உள்ள ஒரு தொகுதியிலேயும் ஜெயிச்சதாலே, அம்மா அவருக்கு பேரைக் கேட்டவுடவேயே கும்புடுற துறையோட சேர்த்து ‘குற்றம் குற்றமே’னு சொல்லக் கூடிய துறையையும் கூடுதலா ஒதுக்குனாங்க.

ஆளு, பளபளனு தக்காளி மாதிரி இருக்கிறதாலே இவரு சும்மா இருந்தாலும், இவரை சுத்தி வர்ரவங்க சும்மா இருக்க மாட்டாங்க போலிருக்கு. ஆரம்ப காலத்துலே மாவட்ட செயலாளரா இருந்த போதே ‘சில்க்’ பெயர் கொண்ட ஒரு அம்மணி கிட்டே வழுக்கி விழுந்துட்டாரு நம்மாளு. அதுக்கப்புறமா, ‘குயின்’ மாதிரி ஒருத்தர் கிடைக்க, சில்க்குக்கு ‘கல்தா’ குடுத்துட்டு, குயினோட குடும்பம் நடத்த ஆரம்பிச்சுட்டாரு. காரனம், அந்த குயின் ஒரு டாக்டரா இருந்ததாலே, வரவுக்கும் செலவுக்கும் பிரச்சனை இல்லாம சுமூகமா ஓடிக்கிட்டு இருந்துச்சு. ஏற்கனவே ஒரு மனைவி இருந்தாலும் யாருக்கும் தெரியாம அவங்கள கன்னாலம் கட்டிக்கிட்ட்தாகவும் சொல்றாங்க. ஆனா, இவரு ‘பவர்ஃபுல்’ ஆனதுக்கப்புறம் கொஞ்சம் ஒதுங்க ஆரம்பிக்கவே, அதுவரை குயினா இருந்தவங்க ராட்சஸி ஆகி குடைய ஆரம்பிச்சிட்டுட்டாங்க. ‘ஆனதப் பார்த்துக்கோ’னு நம்மாளு சொல்லவும் வெறுப்பான அவங்க, சி.எம்.முக்கே புகார் அனுப்புனாங்க.

அம்மாவும், ‘பார்த்து முடிங்க பரம்பொருளே…’னு அட்வைஸ் பன்னி இருக்காங்க. ஆனா, ‘அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா’னு சொல்லி, சின்னம்மாவை வெச்சு சமாளிச்ச்சுட்டாரு நம்மாளு. அதுக்கப்புறம், ‘பணத்தை எல்லாம் பிடுங்கிட்டு ஏன்னையும் ஏமாத்திட்டாருனு’ விசயம் போலீஸ் வரைக்கும் போகவே, கட்சிக்கு கெட்ட பேர் வர ஆரம்பிருச்சு. தவிர, இந்த விசயத்துலே அம்மாவும் ரொம்ப ‘ஸ்ட்ரிக்ட்’ அதுனாலே, திடீர்னு எல்லா பவரையும் பிடுங்கிட்டு, ‘இனிமே நீங்க வெறும் எம்.எல்.ஏ.தானு சொல்லீட்டாங்க. நம்மாளு ‘பவர்’ ஆன ஒரு மண்டல காலத்திலேயே எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு. ஆனா, பிரச்சனையை ‘செட்டில்’ பன்னி முடிச்சதுக்குப் பிறகும், எம்.எல்.ஏ.வாவே இருந்தாரு மனுசன். அடுத்த கொஞ்ச நாளுலே, ‘இனிமே நீங்க ரங்கா ரங்கானு எந்தப் பக்கமும் ரவுண்டு அடிக்க வேனாம்னு’ சொல்லி, ‘பொறுப்பான’ அந்த பதவியையும் பிடுங்கிட்டாங்க அம்மா. இதெல்லாம், பழைய கதை.

அம்மா போன பின்னாடி, அடிக்கடி பெரியகுளத்துப் பக்கம் போக வர இருக்கவே, இப்போ முதல்வரா இருக்கிறவரு அந்த சுடரை தன்னோட ஐக்கியம் ஆக்கிட்டு, மத்திய மண்டலத்திலே இருக்கிற அந்த மாவட்ட முக்கியப் புள்ளிகள் மூனு பேரில் ஒருத்தராகவும் அவரை ஆக்கிட்டாரு சி.எம். கிட்டத்தட்ட 8 வருசம் சும்மா இருந்த அவருக்கு பதவி கிடைச்சதும், மறுபடியும் சுக்கிர பகவான் அவரு கிட்டேயே குத்தகைக்கி வந்துட்டாரு. இந்த நேரத்துலே எலக்சன் வேற வரப்போகுதா…?, பழையபடி இவரும் வளைய வர ஆரம்பிச்சுட்டதா சொல்றாங்க.

                அதாவது, மத்திய மண்டலத்துலே இருக்கிற ‘குடி’யான ஊரைச் சேர்ந்த ஒருத்தங்க இவருக்கு ரொம்ப நெருக்கமாகவே, ‘கவலையே படாதீங்க. உங்களுக்குனு ‘தனியா’ ஒரு தொகுதியை தாரேனு’ அம்மணிக்கு வாக்குறுதியும் குடுத்துட்டாராம். இதுக்காக ரெண்டு ‘சி’ பேசி, சுளையா அம்பது ‘எல்’ அட்வான்ஸ் வாங்கிட்டதாவும் சொல்றாங்க. அதுனால, அம்மணியும், தன்னோட சொந்த ஊரை விட்டுட்டு பசுமையான மலையடிவாரத்துலே இருக்கிற அந்த தனியான தொகுதிக்கே குடி போயிட்டாங்களாம்” என்ற நையாண்டியிடம்,

“அரசியல்லே இதெல்லாம் சகஜம் தானுங்களே…?” எனக் கேட்டோம் நாம்.

“அபிஷ்ட்டு, அபிஷ்ட்டு.., இந்த அம்மணியும் ஒரு டாக்டர்..!” என்ற நையாண்டி, திடீரென ஞாபகம் வந்தவராக, “ஓ.., இன்னைக்கி வள்ளலார் நினைவு தினமாச்சே என்றபடியே,

                ‘”அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை…” எனப் பாடிக் கொண்டே நடையைக் கட்டினார்.

YouTube
Instagram
WhatsaApp
error: This Content is reserved and protected by www.naradharvoice.com